ரஜினிக்கு கிடைத்த சாதகமான தீர்ப்பு!

ரஜினிக்கு கிடைத்த சாதகமான தீர்ப்பு!

செய்திகள் 7-Feb-2015 11:15 AM IST VRC கருத்துக்கள்

மும்பையில் உள்ள ‘வர்ஷா புரொடக்‌ஷன்’ என்ற பட நிறுவனம் ‘மே ஹூன் ரஜினிகாந்த்’ (நான்தான் ரஜினிகாந்த்) என்ற பெயரில் ஒரு ஹிந்திப் படத்தை தயாரித்து வருகிறது. இந்தப் படம் நடிகர் ரஜினிகாந்தை அவதூறாக சித்தரித்து எடுக்கப்படு வருவதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்திடம் முன் அனுமதி பெறாமல் அவரது பெயரில் எடுக்கப்பட்டு வரும் இப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று கோரி, சில மாதங்களுக்கு முன் நடிகர் ரஜினிகாந்த் சென்னை உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.தமிழ்வாணன் ‘நான்தான் ரஜினிகாந்த்’ படத்துக்கு இடைக்கால தடை விதித்து கடந்த செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு சம்பந்தமாக அந்த படத்தை தயாரித்து வரும் ‘வர்ஷா புரொடக்‌ஷன்’ நிறுவனத்தினரிடம் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு மனுக்களையும் விசாரித்த நீதிபதி, ‘‘ ரபல நடிகர் ரஜினிகாந்த் பெயரை எதிர்மனுதாரர் தன் படத்துக்கு அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளார். படத்தின் பெயரை பார்க்கும்போது அது ரஜினிகாந்தைதான் குறிக்கும். எனவே இந்தப் படத்திற்கு விதித்துள்ள இடைக்கால தடையை நிரந்தர தடையாக மாற்றி உத்தரவிடுகிறேன்’’ என்று தீர்ப்பு அளித்துள்ளார். இந்த தீர்ப்பால் ரஜினிகாந்த் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூப்பர் ஸ்டாரின் வாழ்த்துக்கள் - அருண் பிரபு பேட்டி


;