ஜீவாவை இயக்கும் பேய் பட இயக்குனர்!

ஜீவாவை இயக்கும் பேய் பட இயக்குனர்!

செய்திகள் 7-Feb-2015 10:49 AM IST VRC கருத்துக்கள்

ஹாரர் பட வரிசையில் வணிக ரீதியாக பெரும் வெற்றிப் பெற்ற படம் ‘யாமிருக்க பயமே’. ஆர்.எஸ்.இன்ஃபோடெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்திருந்த இப்படத்தை டிகே இயக்கியிருந்தார். இந்தப் படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாவது பாகம் தயாரிக்க இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் அது சம்பந்தமான அதிகாரபூர்வமான தகவல்கள் எதுவும் வரவில்லை! ஆனால் லேட்டஸ்ட் தகவலின் படி, டிகே அடுத்து இயக்கும் படத்தில் ஜீவா ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தை ‘யாமிருக்க பயமே’ படத்தை தயாரித்த ஆர்.எஸ்.இன்ஃபோடெய்ன்மென்ட் நிறுவனமே தயாரிக்கிறது. ஆனால் இது ‘யாமிருக்க பயமே’ படத்தின் இரண்டாவது பாகமா என்று தெரியவில்லை. ஜீவா நடித்து சமீபத்தில் வெளியான ‘யான்’ திரைப்படத்தை தயாரித்ததும் ‘ஆர்.எஸ்.இன்ஃபோடெய்ன்மென்ட்’ நிறுவனம் தான்! ஆனால் ரவி.கே.சந்திரன் இயக்கிய இப்படம் கமர்ஷியல் ரீதியாக பெரிய வரவேற்பை பெறவில்லை. .டிகே இயக்கத்தில் ஜீவா நடிக்கும் புதிய படத்தின் அதிகாரபூரவமான அறிவிப்பு விரைவில் வெளிவருமாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கவலை வேண்டாம் - டீசர் 2


;