VSOP-க்காக பாண்டிச்சேரி பறந்த விஷால்!

VSOP-க்காக பாண்டிச்சேரி பறந்த விஷால்!

செய்திகள் 7-Feb-2015 10:31 AM IST VRC கருத்துக்கள்

எம்.ராஜேஷ் இயக்கி வரும் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆர்யா, தமன்னா, சந்தானம் முதலானோர் நடிக்கும் இப்படத்தில் விஷால் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பாண்டிச்சேரியில் நடந்து வருகிறது. இப்படத்தில் விஷால் தோன்றும் காட்சிகளின் படபிடிப்பிற்காக நேற்று விஷால் பாண்டிச்சேரி சென்றுள்ளார். ஓரிரு நாட்களில் விஷால் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்து விடுமாம்! எம்.ராஜேஷ் இயக்கும் படங்களிலும், ஆர்யா நடிக்கும் படங்களிலும் வேறு ஹீரோக்கள் கெஸ்ட் ரோலில் நடிப்பது வழக்கம்! எம்.ராஜேஷ், ஆர்யா மீண்டும் கூட்டணி அமைத்து உருவாக்கி வரும் இப்படத்தில் விஷால் இணைந்துள்ளதால் ரசிகரக்ளிட்ம் இப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

துப்பறிவாளன் - டீசர்


;