கூலிப்படையினரின் கதையைச் சொல்லும் ‘k3’

கூலிப்படையினரின் கதையைச் சொல்லும் ‘k3’

செய்திகள் 6-Feb-2015 1:14 PM IST VRC கருத்துக்கள்

‘காமதேனு இண்டர்நேஷனல்’ பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘k3’. இப்படத்தில் விமல்ராஜா கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஆதிரா நடிக்கிறார். ஒளிப்பதிவாளரான எம்.எஸ்.அண்ணாதுரை இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார். படம் குறித்து அவர் கூறும்போது,

‘‘இரவு நேரங்களில் போஸ்டர் ஒட்டும் கதிர், கஞ்சா, கருப்பு என்ற மூன்று இளைஞர்களின் வாழ்க்கை தான் இப்படம்! அதனால் தான் படத்திற்கு ‘k3’ என்று பெயர் வைத்துள்ளோம். அந்த மூன்று இளைஞர்கள் எப்படி கூலிப்படையாக மாறுகிறார்கள் என்பதை விறுவிறுப்பான திரைக்கதையாக இயக்கியுள்ளேன். இன்று நாட்டில் கூலிப்படை வேலை செய்வது பெரும்பாலும் பதினெட்டு வயது முதல் இருபத்தைந்து வயதுக்குட்பட்ட இளைஞர்கள் தான்! அவர்கள் கூலிப்படையாக மாற காரணம் அவர்களது சூழ்நிலைதான்! அதைதான் படத்தில் சொல்கிறோம். திருநெல்வேலி, கேரளா, சென்னை, சேலம் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ள இப்படத்தை பார்த்த கன்னட தயாரிப்பாளர் ஒருவர் இந்த படத்தின் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளில் மொழிமாற்றம் செய்யும் உரிமையை வாங்கிவிட்டார்! இது எங்கள் படத்திற்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறோம். இப்படத்தை இம்மாதம் 20 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.

இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை பள்ளியில் பயின்ற மாணவர் பிரத்வய் சிவசங்கர் இசை அமைத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிகை - டிரைலர்


;