50 நாட்களை கடந்த பீகே!

50 நாட்களை கடந்த பீகே!

செய்திகள் 6-Feb-2015 12:03 PM IST VRC கருத்துக்கள்

பெரும் எதிர்பார்ப்புடன் ஆமீர்கான் நடிப்பில் சமீபத்தில் உலகம் முழுக்க ரிலீசான படம் ‘பீகே’. ரசிகர்களிடத்தில் பெரிய வரவேற்பு கிடைத்த இப்படம் இந்திய சினிமாவின் அனைத்து வசூல் சாதனைகளையும் முறியடித்து இப்போது முன்னிலையில் இருந்து வருகிறது. இன்னமும் ரசிகர்களின் பேராதரவுடன் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் இப்படம் வெளியாகி இன்று 50-ஆவது நாளை தொட்டுள்ளது! வரிசையாக வெற்றிப் படங்களை கொடுத்து வரும் ஆமீர்கான், இப்படத்திலும் மாறுபட்ட ஒரு கேரக்டரில் நடித்திருந்தார். பாலிவுட்டில் இப்படம் இன்னமும் சில தியேட்டர்களில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறதாம். இப்படம் கண்டிப்பாக 100 நாட்களை தாண்டி ஓடும் என்று சில பாலிவுட் பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கூட்டத்தில் ஒருத்தன் - ஏன்டா இப்படி பாடல் வீடியோ


;