ஜெய்யின் 6 பேக்! விரைவில் திரையில்!

ஜெய்யின் 6 பேக்! விரைவில் திரையில்!

செய்திகள் 6-Feb-2015 10:58 AM IST VRC கருத்துக்கள்

‘எங்கேயும் எப்போதும்’, ‘இவன் வேற மாதிரி’ படங்களை இயக்கிய எம். சரவணன் இயக்கியுள்ள படம் ‘வலியவன்’. சரவணன் இயக்கத்தில் ‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் நடித்த ஜெய் தான் இப்படத்திலும் கதாநாயகன்! ‘எஸ்.கே.ஸ்டுடியோஸ்’ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இப்படத்தில் ஜெய் 6 பேக் வைத்து நடித்துள்ளார். இதற்காக அவர் கிட்டத்தட்ட 6 மாத காலம் கடும் பயிற்சி எடுத்துள்ளாராம். இப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக ஆன்ட்ரியா நடித்துள்ளார்.

இவர்களுடன் அழகம் பெருமாள், ‘பண்ணையாரும் பத்மினியும்’ புகழ் பாலாவும் நடித்துள்ளனர். ப்பு சென்னை பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்டு தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. டி,இமான் இசை அமைத்துள்ள இப்படத்தின் பாடல்களை விரைவில் வெளியிட இருக்கிறார்கள். இதனை தொடர்ந்து ‘வலியவன்’ படத்தை விரைவில் ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனக்கு வாய்த்த அடிமைகள் - டீசர்


;