காதலிகளை கண்டித்து உண்ணாவிரதம் இருக்கும் ஆர்யா, சந்தானம்!

காதலிகளை கண்டித்து உண்ணாவிரதம் இருக்கும் ஆர்யா, சந்தானம்!

செய்திகள் 6-Feb-2015 9:25 AM IST Chandru கருத்துக்கள்

‘ஆர்யாவும், சந்தானமும் ஒன்றாக சேர்ந்தால் என்னென்ன அட்டகாசங்கள் செய்வார்கள்’ என்பதை ஏற்கெனவே ராஜேஷ் இயக்கிய ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் ரசிகர்கள் பார்த்திருப்பார்கள். இப்போது மீண்டும் ரசிகர்களின் வயிறுகளை சிரித்து சிரித்து புண்ணாக்குவதற்காக களத்தில் குதித்திருக்கிறது இந்த மூவர் கூட்டணி!

‘அழகுராஜா’ படத்தைத் தொடர்ந்து எம்.ராஜேஷ் தற்போது ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ (சுருக்கமாக VSOP) படத்தை இயக்கி வருகிறார். ஆர்யா ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக முதல்முறையாக தமன்னா நடிக்கிறார். வழக்கம்போல் ஹீரோவின் நண்பனாக இப்படத்திலும் சந்தானமே நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ‘தாமிரபரணி’ பானு நடிக்கிறார்.

இப்படத்திற்காக பாண்டிச்சேரி கடற்கரை சாலையில் தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. காட்சிப்படி ‘அற்ப காரணங்களுக்காக காதலன்களை கழட்டிவிடும் காதலிகளை கண்டித்து உண்ணாவிரதம்’ இருப்பவர்களாக ஆர்யாவும், சந்தானமும் நடித்து வருகிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையுடன் ஆர்யாவும், சந்தானமும் உண்ணாவிரதம் இருக்கும் இடத்தில் கூல் ட்ரிங்ஸ் பாட்டில், வாழைப்பழங்கள், டிபன் கேரியரில் சாப்பாடு என ஒரு பெரிய விருந்துக்குத் தேவையானவற்றை வைத்துக் கொண்டு உண்ணாவிரதம் இருப்பதுதான். இந்த காட்சியைப் படமாக்கும்போது யூனிட் ஆட்களே விழுந்து விழுந்து சிரித்தார்களாம். கண்டிப்பாக ரசிகர்களும் இந்த காட்சியை பார்த்து வயிறு குலுங்க சிரிப்பார்கள் என்கிறது VSOP படக்குழு!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;