ரிலீசுக்கு தயாரான ‘புறம்போக்கு’

ரிலீசுக்கு தயாரான ‘புறம்போக்கு’

செய்திகள் 5-Feb-2015 12:52 PM IST VRC கருத்துக்கள்

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ஆர்யா, விஜய்சேதுபதி, ஷாம், கார்த்திகா நாயர் முதலானோர் நடித்து இன்று வெளியாகியுள்ள ‘புறம்போக்கு’ படத்தின் டிரைலர் அனைவரையும் கவரும்படி அமைந்துள்ளது. இப்படத்தின் பெரும்பாலான வேலைகளும் முடிந்து படம் ரிலீசுக்கு ரெடியாகி கொண்டிருக்கிறது. ஒரு சில போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் மட்டுமே மிச்சம் இருக்கும் இப்படத்தை இந்த மாத இறுதிக்குள் சென்சாருக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக இப்படத்தை தயாரிக்கும் ‘யுடிவி’ நிறுவனத்தின் செயல் அதிகாரி தனஞ்சயன் தெரிவித்துள்ளார். வர்ஷன் இசை அமைத்துள்ள இப்படத்தின் ஆடியோ உரிமையை பிரபல சோனி நிறுவனம் கைபற்றியுள்ளது. விரைவில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவையும் சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ள படக்குழுவினர் இப்படத்தை ஏப்ரல் முதல் வாரம் ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டுள்ளனர். எஸ்.பி.ஜனநாதனின் ‘பினாரி பிக்சர்ஸும்’, ‘யுடிவி’ நிறுவனமும் இணைது தயாரித்துள்ள இப்படம் இந்தியாவின் பல மாநிலங்களில் பிரம்மாண்டமான முறையில் படமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு பக்க கதை - டிரைலர்


;