முழு நேர நடிகராகும் எஸ்.ஏ.சி.!

முழு நேர நடிகராகும் எஸ்.ஏ.சி.!

செய்திகள் 5-Feb-2015 11:10 AM IST VRC கருத்துக்கள்

எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கி, தயாரித்து நடித்து சமீபத்தில் ரிலீசான படம் டூரிங் டாக்கீஸ். இரண்டு கதைகள் கொண்ட இந்தப் படத்தின் ஒரு கதையின் நாயகனாக எஸ்.ஏ.சந்திரசேகரன் நடித்திருந்தார். இப்படத்திற்கு ரசிகர்களிடம் பரவலான வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் எஸ்.ஏ.சந்திரசேகரனுக்கு தொடர்ந்து படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்துள்ளன. இதில் ஏ.வெங்கடேஷ் சொன்ன ஒரு கதை எஸ்.ஏ.சி.க்கு ரொம்பவும் பிடித்துள்ளதால் அதில நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம். இது தவிர இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவாக நடிக்கும் படியான ஒரு கதையும் இவருக்கு கூறப்பட்டுள்ளது. இந்த கதையும் அவருக்கு பிடித்துள்ளதாம். இதிலும் எஸ்.ஏ.சி.நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறாராம். இது தவிர நடிப்புடன் ‘டூரிங் டாக்கீஸ்’ படத்தை மற்ற மொழிகளில் இயக்கவும் திட்டமிட்டுள்ளாராம் எஸ்.ஏ.சந்திரசேகரன்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

முத்துராமலிங்கம் - டிரைலர்


;