விக்ரம் அறிமுகப் பாடலை பாடும் விஷால்!

விக்ரம் அறிமுகப் பாடலை பாடும் விஷால்!

செய்திகள் 4-Feb-2015 3:17 PM IST VRC கருத்துக்கள்

பிரபல பாலிவுட் பின்னணி பாடகரும், கம்போசருமான விஷால் தட்லானி ‘வணக்கம் சென்னை’ படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானவர். அனிருத் இசையில் அவர் பாடிய ‘ஓ பெண்ணே…’ பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. ‘வணக்கம் சென்னை’ படத்தை தொடர்ந்து விஷால் தட்லானி விக்ரம் நடிக்கும் ‘பத்து என்றதுக்குள்ள’ படத்திற்காகவும் ஒரு பாடலை பாடியுள்ளார். விஜய் மில்டன் இயக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிறார். டி.இமான் இசையில் விஷால் தட்லானி பாடிய பாடலின் பதிவு சமீபத்தில் நடந்துள்ளது. இப்படத்தில் விக்ரமுக்கான அறிமுகப்பாடலாம் இது! அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகி வரும் இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - பாடல் வீடியோ


;