மீண்டும் ‘முதல்வன்’ கூட்டணி!

மீண்டும் ‘முதல்வன்’ கூட்டணி!

செய்திகள் 4-Feb-2015 1:07 PM IST VRC கருத்துக்கள்

‘ஜெய்ஹிந்த் 2’ படத்தை தொடர்ந்து ‘கேம்’ என்ற படத்தில் நடிக்கிறார் அர்ஜுன். தமிழ், தெலுங்கு, கன்னடம் என 3 மொழிகளில் உருவாகும் இப்படத்தை ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்குகிறார். சந்தன கடத்தல் வீரப்பன் கதையை வைத்து ஏ.எம்.அர்.ரமேஷ் இயக்கிய ‘வனயுத்தம்’ படத்தில் அர்ஜுன் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். அந்த படத்திற்கு பிறகு இருவரும் இணையும் ‘கேமி’ல் அர்ஜுனுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை மனிஷா கொய்ராலா நடிக்கிறாராம். ஏற்கெனவே அர்ஜுனுடன் ஷங்கர் இயக்கிய ‘முதல்வன்’ படத்திலும், கமல்ஹாசனுடன் ஷங்கர் இயககிய ‘இந்தியன்’ படத்திலும் நடித்துள்ள மனிஷா கொய்ராலா சமீபத்தில் நடித்த தமிழ் படம் தனுஷின் ‘மாப்பிள்ளை’. ‘முதல்வன்’ படத்திற்கு பிறகு மீண்டும் ‘கேம்’ படம் மூலம் அர்ஜுனுடன் இணைய இருக்கிறார் மனிஷா கொய்ராலா!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;