3 வருடத்தில் சிவகார்த்திகேயன் தொட்ட உயரம்!

3 வருடத்தில் சிவகார்த்திகேயன் தொட்ட உயரம்!

செய்திகள் 4-Feb-2015 12:10 PM IST VRC கருத்துக்கள்

சிவகார்த்திகேயன் நடிக்க வந்து நேற்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்தது. பாண்டிராஜ் இயக்கித்தில் அவர் நடித்த முதல் படமான ‘மெரினா’ வெளியான நாள் 3 ஃபிப்ரவரி, 2012. இந்தப் படத்துடன் அவர் நடிப்பில் 3, மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே என 7 படங்கள் வெளியாகியுள்ளது. இவை அனைத்தும் வெற்றிப் பெற்ற படங்கள் என்பதில் சிவகார்த்திகேயனுக்கு தனி பெருமை உண்டு! தற்போதுள்ள சூழ்நிலையில் தொடர் வெற்றிகளை கொடுப்பது என்பது கஷ்டமான ஒன்று! அந்த வகையில் சிவகார்த்திகேயன் அதிர்ஷ்டக்காரராக இருக்கிறார். அடுத்து இவரது நடிப்பில் ரிலீசாகவிருக்கும் படம் ‘காக்கிச் சட்டை’. இப்படம் இம்மாதம் 27-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது. இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது ‘ரஜினி முருகன்’ படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்! கடந்த 3 ஆண்டுகளில் சினிமாவில் பெரிய ஒரு இடத்தை பிடித்துக் கொண்டுள்ள சிவகார்த்திகேயனின் வெற்றிப் பயணம் தொடர நமது வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரெமோ - டிரைலர்


;