‘என்னை அறிந்தால்’ : ஏ.எம்.ரத்னத்தின் புதிய திட்டம்!

‘என்னை அறிந்தால்’ : ஏ.எம்.ரத்னத்தின் புதிய திட்டம்!

செய்திகள் 4-Feb-2015 10:57 AM IST Chandru கருத்துக்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் ‘என்னை அறிந்தால்’ படம் நாளை உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. இப்படத்திற்காக தமிழகத்தில் 532 திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. உலகெங்கும் 1200க்கும் அதிகமான தியேட்டர்களில் படம் ரிலீஸாகிறது. ‘என்னை அறிந்தால்’ படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 46 நிமிடங்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால், இது சென்சாருக்காக ‘கட்’ செய்யப்பட்ட வெர்ஷனாகும். இப்படத்தின் முழுமையான ரன்னிங் டைம் 3 மணி நேரம் 8 நிமிடங்களாகும்.

நாளை வெளியாகும் ‘என்னை அறிந்தால்’ படம் 2 மணி நேரம் 46 நிமிடங்கள் ஓடுமாம். இப்படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைக்கும் பட்சத்தில், படத்தின் முழுமையான வெர்ஷனை (3 மணி நேரம் 8 நிமிடங்கள்) ஒருசில வாரங்களுக்குப் பிறகு குறிப்பிட்ட தியேட்டர்களில் வெளியிடும் திட்டத்தையும் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் வைத்திருக்கிறாராம். ஏனென்றால் அந்த முழு வெர்ஷனுக்கும் தனியாக ஒரு சென்சார் சான்றிதழும் வாங்கப்பட்டிருக்கிறதாம். ஆனால், இந்த முழு வெர்ஷன் ஒரு சில குறிப்பிட்ட காட்சிகள் மட்டுமே ரிலீஸாகுமாம். மற்றபடி பெரும்பாலான திரையரங்குகளில் 2 மணி நேரம் 46 நிமிடங்கள் ஓடும் ‘என்னை அறிந்தால்’ கட் வெர்ஷனே ஒளிபரப்பப்படுமாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;