தனுஷுடன் 9 வருடங்களுக்குப் பிறகு இணையும் டி.இமான்!

தனுஷுடன் 9 வருடங்களுக்குப் பிறகு இணையும் டி.இமான்!

செய்திகள் 4-Feb-2015 10:04 AM IST Chandru கருத்துக்கள்

இரண்டு நாட்களுக்கு முன்பே நாம் செய்தி வெளியிட்டதுபோல் பிரபுசாலமன் இயக்கும் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்கிறார் என்பதை தற்போது அதிகாரபூர்வமாகவே அறிவித்துவிட்டார்கள். ‘கயல்’ படத்தைத் தொடர்ந்து, சத்யஜோதி ஃபிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் தயாரிப்பில் பிரபு சாலமன் புதிய படம் ஒன்றை இயக்குகிறார். தனுஷ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்திற்கு பிரபு சாலமனின் ஆஸ்தான இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார். 2006ல் வெளிவந்த ‘திருவிளையாடல் ஆரம்பம்’ படத்திற்குப் பிறகு 9 வருடங்கள் கழித்து தனுஷுடன் மீண்டும் இமான் இணைவது குறிப்பிடத்தக்கது. இடையில் ‘யாரடி நீ மோகனி’ படத்தில் ‘பாலக்காட்டு மச்சானுக்கு’ என்ற ஒரு பாடலை மட்டும் இமான் உருவாக்கியிருந்தார்.

பெரிய பட்ஜெட்டில் ஆக்ஷன் படமாக உருவாகவிருக்கும் இப்படத்திற்கு வி.மகேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, ‘டான் மேக்ஸ்’ தாஸ் எடிட்டிங் செய்கிறார். செந்தில் தியாகராஜன், அர்ஜூன் தியாகராஜன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் நாயகி, மற்ற கதாபாத்திரங்களில் நடிப்பவர்களின் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படுமாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெஞ்சில் துணிவிருந்தால் - டீசர்


;