சூர்யாவுடன் இணையும் அமலா பால்!

சூர்யாவுடன் இணையும் அமலா பால்!

செய்திகள் 3-Feb-2015 4:49 PM IST VRC கருத்துக்கள்

தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாஸ்’ படத்தில் நடித்து வரும் சூர்யா, தனது 2டி பட நிறுவனம் சார்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படம் தயாரிக்கிறார். குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்படும் இப்படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார் என்று சில இணைய தளங்களிலும், பத்திரிகைகளிலும் செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால் அது வெறும் வதந்திதானாம்! 2டி நிறுவனம் அந்த கேரக்டருக்காக அமலா பாலிடம் மட்டுமே பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறது. இப்போது அமலா பாலை ஒப்பந்தமும் செய்து விட்டது.

2டி நிறுவனத்தின் மற்றொரு தயாரிப்பாக ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ மலையாள படத்தின் ரீ-மேக் உருவாகி வருகிறது என்பதும் இதில் கதையின் நாயகியாக ஜோtதிகா நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை மலையாளத்தில் இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூஸே தமிழிலும் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து இப்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காதல் கடல் தானா வீடியோ பாடல் - ராட்சசன்


;