ஹீரோவாகும் சௌந்தர ராஜா!

ஹீரோவாகும் சௌந்தர ராஜா!

செய்திகள் 3-Feb-2015 3:53 PM IST VRC கருத்துக்கள்

‘சுந்தரபாண்டியன்’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ஜிகர்தண்டா’ ஆகிய படங்களின் மூலம் பரவலாக அறியப்பட்ட நடிகர் சௌந்தர ராஜா. இவர் ராமகிருஷ்ணனுடன் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக நடிக்கும் ‘ஒரு கனவு போல’ திரைப்படம் மற்றும் இவர் தனி கதாநாயகனாக நடிக்கும் படங்களின் அறிவிப்பு விரைவில் வரவிருக்கிறதாம். இந்தப் படங்களுடன் சௌந்தர ராஜாவுக்கு மலையாளம், தமிழ் என இரு மொழிகளில் உருவாகும் ஒரு படத்தில் நடிக்கவும் வாயுப்பு கிடைத்துள்ளதாம். ‘மன்னர்’ என்ற படத்தில் அசோஸியேட் இயக்குனராக பணிபுரிந்த தேவராஜ் இப்படத்தை இயக்க இருக்கிறாராம். தமிழில் ‘பேய் படம்’ என்று டைட்டில் வைத்துள்ள இப்படத்திற்கு மலையாளத்தில் இன்னும் டைட்டில் முடிவாகவில்லையாம். இந்த படத்தின் மூலம் யுவராஜ் என்பவர் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகவிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;