பாராட்டுக்களை அள்ளும் அப்பா அஜித்!

பாராட்டுக்களை அள்ளும் அப்பா அஜித்!

செய்திகள் 3-Feb-2015 12:35 PM IST VRC கருத்துக்கள்

நாளை மறுநாள் (5-ஆம் தேதி) அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ உலகம் முழுக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகிறது. கௌதம் மேனன் - அஜித் முதன் முதலாக கூட்டணி அமைத்து உருவாக்கியுள்ள இப்படத்திற்கு தணிக்கை குழுவினர், பெரியவர்கள் துணையுடன் குழுந்தைகளும் பார்க்க கூடிய படம் என்ற வகையில் ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். அத்துடன் ‘என்னை அறிந்தால்’ படத்திற்கு தனிப்பட்ட முறையிலும் சில சென்சார் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. அதில், ‘என்னகு இதுபோல் ஒரு அப்பா வேண்டும்’ என்று ஒவ்வொரு பெண் குழந்தையும் ஏங்கும் விதமாக அஜித்தின் ஒரு கேரக்டர் அமைந்துள்ளதாக’ குறிப்பிட்டுள்ளனர்.

பதிமூன்று வயதில் இருந்து 40 வயது வரையிலான ஒரு தனி மனிதனின் வாழ்க்கை பயணத்தை சித்தரிக்கும் இப்படத்தில் அஜித் 4 வித தோற்றங்களில் நடித்துள்ளார். இதில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் த்ரிஷா, அனுஷ்கா ஆகியோரின் கேரக்டர்கள் படம் முழுக்க வருவது மாதிரி அமைத்துள்ளார் கௌதம் மேனன் என்றும் கூறப்படுகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ள இப்படத்தின் பாடல்களும், டிரைலரும் ஏற்கெனவே வெளியாகி ஹிட்டாகியுள்ள நிலையில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இப்படம் வருகிற 5-ஆம் தேதி ரிலீசாகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்திரஜித் - ட்ரைலர்


;