‘என்னை அறிந்தால்’ நள்ளிரவு சிறப்புக் காட்சிகள் ரத்து?

‘என்னை அறிந்தால்’ நள்ளிரவு சிறப்புக் காட்சிகள் ரத்து?

செய்திகள் 3-Feb-2015 11:38 AM IST Chandru கருத்துக்கள்

தமிழகத்தைப் பொறுத்தவரை முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் ரிலீஸ் என்றால், வழக்கமான காட்சிகளோடு, அதிகாலை சிறப்புக் காட்சிகளும் ஒளிபரப்பப்படுவது சமீபகாலமாகவே தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த வருடத்தில் வெளியான விஜய்யின் ஜில்லாவும், அஜித்தின் வீரமும் அதிகாலை 3 மணியிலிருந்தே காட்சிகள் ஆரம்பமாகின. அதேபோல் விஜய்யின் ‘கத்தி’ படத்திற்கும் இதுபோன்று சிறப்புக்காட்சிகள் ஒதுக்கப்பட்டன. ரஜினி நடிப்பில் டிசம்பர் 12ஆம் தேதி வெளியான ‘லிங்கா’ படத்திற்கு எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்ததால் படம் நடு இரவு 12.30 மணிக்கெல்லாம் சென்னை, சைதை ராஜ் மற்றும் காசி தியேட்டரில் ஒளிபரப்பப்பட்டன. ஷங்கரின் ‘ஐ’ படத்திற்கும் அதிகாலை 4.30 மணியிலிருந்தே காட்சிகள் ஆரம்பமாகின.

நாளை மறுநாள் (பிப்ரவரி 5) வெளியாகவிருக்கும் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படத்திற்கும் இதேபோல் நள்ளிரவு 12 மணி காட்சிகள் ஒளிபரப்பப்படும் என தல ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், கடந்த வாரம் சென்னையின் சில குறிப்பிட்ட தியேட்டர்களுக்கு ‘வெடிகுண்டு மிரட்டல்’ கடிதம் ஒன்று வந்ததால், பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நள்ளிரவு காட்சிகளுக்கு சென்னை காவல்துறையிடமிருந்து அனுமதி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ‘என்னை அறிந்தால்’ படத்தின் முதல் காட்சி அதிகாலை 5 மணியிலிருந்துதான் துவங்கும் எனத்தெரிகிறது. வழக்கமாக சென்னையின் முதல் காட்சி காசி தியேட்டரில்தான் ஆரம்பிக்கும். இந்தமுறை அங்குகூட ‘என்னை அறிந்தால்’ படத்துக்கு 5 மணி காட்சிதான் முதல் காட்சியாக ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் ‘தல’ ரசிகர்கள் சற்று ஏமாற்றமடைந்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;