‘வாலு’வுக்கு புது ரிலீஸ் தேதி!

‘வாலு’வுக்கு புது ரிலீஸ் தேதி!

செய்திகள் 3-Feb-2015 11:13 AM IST VRC கருத்துக்கள்

இன்று சிம்புவின் பிறந்த நாள்! இதையொட்டி அவரது ‘வாலு’ படத்தின் பாடல் டீஸர் ரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசாகி வெளிவந்துள்ளது. நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வந்த இப்படத்தை சிம்புவின் பிறந்த நாளான இன்று ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். ஆனால் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வரும் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படம் இம்மாதம் 5-ஆம் தேதி ரிலீசாகவிருப்பதால் ‘வாலு’ படத்தின் ரிலீஸை தள்ளி வைத்தனர். அஜித்தின் தீவிர ரசிகர் சிம்பு என்பது குறிப்பிடத்தக்கது. தல படத்துடன் ‘வாலு’ படத்தை வெளியிட விரும்பாத சிம்பு தற்போது ‘வாலு’ பட ரிலீஸ் மார்ச் 27 என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

விஜயசந்தர் இயக்கியுள்ள இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்திருக்க, தமன் இசை அமைத்துள்ளார். ‘நிக் ஆர்ட்ஸ்’ நிறுவனம் சார்பில் சக்கரவர்த்தி இப்படத்தை தயாரித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சக்க போடு போடு ராஜா - டிரைலர்


;