‘உத்தம வில்லன்’ ஆடியோ விழாவில் களரியாட்டம்!

‘உத்தம வில்லன்’ ஆடியோ விழாவில் களரியாட்டம்!

செய்திகள் 3-Feb-2015 11:14 AM IST Chandru கருத்துக்கள்

கமல்ஹாசனின் ‘உத்தம வில்லன்’ பட ஆடியோ வெளியீட்டு விழா அடுத்த மாதம் (மார்ச்) 1-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இவ்விழாவை சென்னையிலுள்ள டிரேட் சென்டரில் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடத்த திட்டமிட்டுள்ளனர் இப்படக் குழுவினர். இவ்விழாவில் பெங்களூரை சேர்ந்த ஒரு கலை குழுவினரின் ஆட்டக்களரி எனும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனராம். ‘உத்தம வில்லன்’ படத்தில் கேரளாவின் தைய்யம் கலை இடம் பெறுகிறது. இந்த கலையுடன் தொடர்புடைய கலை ஆட்டக்களரி என்பது குறிப்பிடத்தக்கது. கமல்ஹாசனும், லிங்குசாமியின் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள ‘உத்தம வில்லன்’ படத்தில் கமல்ஹாசனுடன் ஆன்ட்ரியா, பூஜா குமார், பார்வதி நாயர், ஜெயராம், இயக்குனர்கள் கே.பாலச்சந்தர், கே.விஸ்வநாத் முதலானோர் நடித்துள்ளனர். ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். ‘உத்தம வில்லன்’ ஏப்ரல் 2-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;