வடசென்னை ஏரியா தாதாவாக ‘மாரி’ய தனுஷ்!

வடசென்னை ஏரியா தாதாவாக ‘மாரி’ய தனுஷ்!

செய்திகள் 3-Feb-2015 10:16 AM IST Chandru கருத்துக்கள்

‘வாயை மூடி பேசவும்’ படத்திற்குப் பிறகு பாலாஜி மோகன் இயக்கும் ‘மாரி’ படத்தில் நடிக்கிறார் தனுஷ். அவருடன் முதன்முறையாக ஜோடி சேர்ந்திருக்கிறார் காஜல் அகர்வால். முறுக்கு மீசை, குறுந்தாடி என தனுஷின் வித்தியாசமான கெட்அப்புடன் வெளிவந்த ‘மாரி’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு தமிழ் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பு கிடைத்தது. இப்படத்தில் தனுஷ் டைலராக நடிக்கிறார் என ஆரம்பத்தில் செய்திகள் வெளிவந்தன. ஆனால், இதில் அவர் டைலராக நடிக்கவில்லையாம்... லோக்கல் தாதாவாகத்தான் நடிக்கிறார் என ‘மாரி’ படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

சமீபத்தில் திருவல்லிக்கேணியில் போடப்பட்ட பெரிய மார்க்கெட் செட் ஒன்றில் ‘மாரி’க்கான படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. தற்போது ஷமிதாப் மற்றும் அனேகன் படங்களுக்கான புரமோஷன் வேலைகளில் பிஸியாகவிருக்கிறார் தனுஷ். இதனால் மீண்டும் அவர் இரண்டு வாரங்களுக்குப் பிறகே படப்பிடிப்பில் கலந்துகொள்வார் எனத் தெரிகிறது. தனுஷ் வடசென்னை ஏரியா தாதாவாக நடிக்கும் இப்படத்திற்காக மிகப்பெரிய சேரி செட் ஒன்றை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறதாம். விரைவில் இங்கு படப்பிடிப்பு நடத்தவிருப்பதாகத் தெரிகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆந்திரா மெஸ் - டிரைலர்


;