த்ரிஷா, புதிய படத்தில் ஒப்பந்தம்!

த்ரிஷா, புதிய படத்தில் ஒப்பந்தம்!

செய்திகள் 2-Feb-2015 5:27 PM IST VRC கருத்துக்கள்

அஜித்துடன் ‘என்னை அறிந்தால்’ படத்தில் நடித்து முடித்த கையோடு த்ரிஷா தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் ‘போகி’ என்ற படத்தில் நடிக்க தயாராகி விட்டார். நெருங்கிய மூன்று தோழிகளின் வாழ்க்கை பயணத்தில் நடைபெறும் த்ரில்லர் சம்பவங்களை வைத்து எடுக்கப்படும் படமாம் இது. இதில் த்ரிஷாவுடன் மற்ற தோழிகளாக ஓவியா, பூனம் பஜ்வா ஆகியோர் நடிக்க, இப்படத்தை ‘ப்ரியம்’ பட புகழ் பாண்டியன் இயக்குகிறார். டி.இமான் இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது. தயாரிப்பாளர் வருண் மணியனுடனான திருமண நிச்சயதாரத்தம் முடிந்த நிலையில் த்ரிஷா நடித்துள்ள ‘என்னை அறிந்தால்’ படம் 5-ஆம் தேதி ரிலீசாகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து ‘போகி’ படத்திலும் நடிக்க இருக்கும் த்ரிஷா நடித்து முடித்துள்ள இன்னொரு படம் ‘பூலோகம்’. இப்படமும் விரைவில் ரிலீசாகவிருக்கிறது. இந்த படங்கள் தவிர வேறு சில படங்களும் த்ரிஷா கைவசம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;