மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்?

மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்?

செய்திகள் 2-Feb-2015 5:04 PM IST Chandru கருத்துக்கள்

வரும் 6ஆம் தேதி தனுஷ் நடித்திருக்கும் 2வது ஹிந்தி படமான ‘ஷமிதாப்’ வெளியாகவிருக்கிறது. பால்கியின் இயக்கத்தில் அமிதாப் பச்சனுடன் தனுஷ் இணைந்து நடித்திருப்பதால் இப்படத்திற்கும், தனுஷிற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தனுஷின் ஹிந்தி மார்க்கெட் அங்கிருக்கும் வளர்ந்துவரும் நடிகர்களுக்கு இணையாக உயர்ந்திருப்பதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் தான் இயக்கவிருக்கும் அடுத்த ஹிந்தி படத்தில் தனுஷை நாயகனாக்கலாம் என்ற முடிவில் இருக்கிறாராம் மணிரத்னம்.

தற்போது துல்கர் சல்மான், நித்யா மேனன் நடிக்கும் ‘ஓகே கண்மணி’ படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் மணிரத்னம். இப்படம் தற்போது இறுதிகட்ட வேலைகளில் இருக்கிறது. அதேபோல் தனுஷ் தற்போது பாலாஜி மோகனின் ‘மாரி’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து இயக்குனர்கள் வெற்றிமாறன், வேல்ராஜ், பிரபுசாலமன் ஆகியோரின் படங்களில் நடிக்கவிருக்கிறார். இந்த 3 படங்களுக்குப் பிறகே அவர் மணிரத்னம் இயக்கவிருக்கும் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சுவாதி கொலை வழக்கு - trailer


;