‘என்னை அறிந்தால்’ இறுதி ரன்னிங் டைம்!

‘என்னை அறிந்தால்’ இறுதி ரன்னிங் டைம்!

செய்திகள் 2-Feb-2015 2:47 PM IST Chandru கருத்துக்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய், விவேக் ஆகியோர் நடித்திருக்கும் ‘என்னை அறிந்தால்’ படம் பிப்ரவரி 5ஆம் தேதி வெளியீட்டுக்கு பரபரப்பாக ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் பல திரையரங்குகளிலும் முன்பதிவு நேற்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டு பெரும்பாலான ஷோக்களுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன. பல திரையரங்குகளும் தற்போது அதிகாலை காட்சிகளுக்கான (அதிகாலை 1 மணி, 5 மணி காட்சிகள்) முன்பதிவுகளையும் ஆரம்பித்துள்ளன.

இந்நிலையில் படம் எவ்வளவு நேரம் ஓடும் என்ற தகவலை தெரிவித்திருக்கிறார் நடிகர் அருண் விஜய். இதுகுறித்து தனது ட்வீட்டில், ‘‘2 மணி நேரம் 42 நிமிடங்கள் உங்களை மெய்மறக்கச் செய்யவிருக்கும் அனுபவத்திற்கு தயாராகுங்கள் ரசிகர்களே... பிப்ரவரி 5 (2.48 மணி நேரம் என்ட் கார்டுடன்)’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

‘என்னை அறிந்தால்’ படத்திற்கு முதல் தணிக்கையிலும், பின்னர் மறுதணிக்கையின்போதும் யு/ஏ சான்றிதழே கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தடம் - டைட்டில் வீடியோ


;