வரலட்சுமிக்கு தங்க ஸ்படிக மாலை பரிசளித்த இயக்குனர் பாலா!

வரலட்சுமிக்கு தங்க ஸ்படிக மாலை பரிசளித்த இயக்குனர் பாலா!

செய்திகள் 2-Feb-2015 2:19 PM IST Chandru கருத்துக்கள்

‘பரதேசி’ படத்திற்குப் பிறகு கரகாட்டக்கலையை மையமாக வைத்து பாலா இயக்கி வரும் படம் ‘தாரை தப்பட்டை’. இயக்குனர் சசிகுமார் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நாயகியாக ‘போடா போடி’ வரலட்சுமி நடிக்கிறார். ‘இசைஞானி’ இளையராஜா இசையமைக்கும் ஆயிரமாவது படம் என்ற பெருமையையும் இந்த ‘தாரை தப்பட்டை’ பெற்றிருக்கிறது.

இப்படத்திற்காக தற்போது தஞ்சாவூரில் பெரிய செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது. அதில் ஒரு காட்சியாக வரலட்சுமியை கொலை செய்யும்பொருட்டு கொடூரத் தாக்குதலுக்கு அவர் உள்ளாவதுபோன்ற ஒரு காட்சி படமாக்கப்பட்டது. அப்போது அவருக்கு கழுத்துக்கருகே உள்ள எலும்பில் (Collar bone) அடிபட்டிருக்கிறது. ஆனால், இதைப் பற்றி வெளியில் யாரிடமும் சொல்லாமல் சிகிச்சை எடுத்திருக்கிறார். மறுநாள் இதே காட்சி மீண்டும் படமாக்கப்பட்டபோது, வலியைப் பொறுத்துக்கொண்டு அதில் நடித்துக் கொடுத்தாராம் வரலட்சுமி.

இந்த விஷயம் யூனிட் ஆட்கள் மூலம் இயக்குனர் பாலா கவனத்திற்கு வரவே, வரலட்சுமியின் டெடிகேஷனைப் பார்த்து வியந்த பாலா அவரைப் பாராட்டும்விதமாக ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்பு கொண்ட தங்க ஸ்படிக மாலை ஒன்றை பரிசாக வழங்கியிருக்கிறார். அதோடு வரலசுட்மியின் நடிப்பையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

இப்படத்திற்காக வரலட்சுமிக்கு தேசிய விருது கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என புகழ்கிறார்கள் ‘தாரை தப்பட்டை’ படக்குழுவினர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாச்சியார் - டிரைலர்


;