சிம்புவின் பிறந்தாளை முன்னிட்டு ‘வாலு’ பாடல் டீஸர்!

சிம்புவின் பிறந்தாளை முன்னிட்டு ‘வாலு’ பாடல் டீஸர்!

செய்திகள் 2-Feb-2015 11:24 AM IST Chandru கருத்துக்கள்

நாளை (பிப்ரவரி 3) நடிகர் சிம்புவின் பிறந்தநாள். அதனால் ‘வாலு’ படத்திலிருந்து ‘யு ஆர் மை டார்லிங்...’ பாடலின் வீடியோ டீஸர் ஒன்றை இன்று இரவு 12 மணிக்கு வெளியிடவிருக்கிறார்கள். 2012ல் பூஜை போடப்பட்டு இன்னும் வெளிவராமலிருக்கும் இப்படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைத்துள்ளார். ‘வாலு’ ஆல்பம் வெளிவந்து பல மாதங்கள் ஆகிவிட்டன. பாடல்கள் ஹிட் என்றாலும், நீண்டநாட்கள் ஆகிவிட்டதால் ரசிகர்களே இப்போது மறந்துதான் போயிருப்பார்கள். அதனை நினைவூட்டும் விதமாகவும், சிம்புவின் பிறந்தநாள் விருந்தாக ரசிகர்களுக்கு கொடுக்கும் பொருட்டும் இந்த டீஸரை வெளியிடவிருக்கிறார்களாம்.

‘வாலு’ திரைப்படம் கடந்த டிசம்பரில் வெளியாகவிருந்தது. பின்னர் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ பொங்கலுக்கு வரவிருப்பதால் ‘வாலு’ படத்தை சிம்புவின் பிறந்தாநாளன்று வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம் என தயாரிப்பாளர் எஸ்.எஸ்.சக்ரவர்த்தி அறிவித்தார். இப்போது ‘என்னை அறிந்தால்’ படத்தின் ரிலீஸும் பிப்ரவரி 5ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. இதனால் ‘வாலு’ எப்போது வரும் என்பது குறித்து தயாரிப்பாளரின் பதிலுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;