கனவுகளை நனவாக்கும் அனிருத்!

கனவுகளை நனவாக்கும் அனிருத்!

செய்திகள் 2-Feb-2015 10:58 AM IST Chandru கருத்துக்கள்

3, எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, வேலையில்லா பட்டதாரி, மான் கராத்தே, கத்தி, காக்கி சட்டை என அனிருத்தின் இசையமைப்பில் மொத்தமே 7 ஆல்பங்கள்தான் இதுவரை வெளிவந்திருக்கின்றன. ஆனால், அதற்குள் தென்னிந்தியாவின் முக்கிய இசையமைப்பாளர்களுள் ஒருவராக உருவெடுத்துவிட்டார். தற்போது ஆக்கோ, மாரி, நானும் ரௌடிதான், ரங்கூன் ஆகிய படங்கள் உட்பட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

படங்களுக்கு இசையமைப்பது ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும், இன்னொருபுறம் தனிப்பட்ட ஆல்பங்களை உருவாக்கும் தன்னுடைய கனவை நனவாக்கும் முயற்சிகளிலும் தீவிரமாக இருக்கிறார் அனிருத். சமீபத்தில் வெளிவந்த அவருடைய ‘சான்ஸே இல்ல...’ ஆல்பத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்ததும் அதற்கு ஒரு காரணம். விரைவில் வெளிவரவிருக்கும் ‘ஆக்கோ’ படத்தின் பாடல்களுடன் இன்னொரு வித்தியாசமான ஆல்பம் ஒன்றை களமிறக்கவிருக்கிறார் அனிருத். அதனைத் தொடர்ந்து முழுக்க முழுக்க கர்நாடக இசையை மையமாக வைத்து ஆல்பம் ஒன்றை உருவாக்கும் திட்டத்திலும் இருக்கிறாராம் அனிருத்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சொடக்கு ஆடியோ பாடல்


;