‘‘விஜய்யின் ‘யோஹன்’ விரைவில் படமாகும்!’’ - கௌதம் மேனன்

‘‘விஜய்யின் ‘யோஹன்’ விரைவில் படமாகும்!’’ - கௌதம் மேனன்

செய்திகள் 2-Feb-2015 10:35 AM IST VRC கருத்துக்கள்

விஜய் நடிப்பில், ‘யோஹன் : அத்தியாயம் ஒன்று’ என்று ஒரு படத்தை கௌதம் மேனன் இயக்குவதாக இருந்தது. பிறகு அந்தப் படம் கைவிடப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரியும். இப்படம் கைவிடப்பட்டதற்கான காரணம் குறித்த கேள்வி ஒன்றிற்கு சமீபத்திய பத்திரிகை பேட்டி ஒன்றில் பதிலளித்திருக்கிறார் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்.

இப்படத்தின் கதை பெரும்பாலும் லண்டனில் நடப்பது மாதிரி தான் கௌதம் மேனன் எழுதி வைத்திருந்தாராம்! லண்டனில் நடப்பது மாதிரியான கதை என்பதால் படத்தில் நிறைய ஆங்கில வசனங்கள் வரும் என்பதால், இதனை தமிழ் சினிமா ரசிகர்கள் விரும்பமாட்டார்கள் என விஜய் நினைத்ததாலேயே இப்படத்திலிருந்து விலகினாராம். ஆனால் ‘யோஹன் : அத்தியாயம் ஒன்று’ கதை கைவிடப்படவில்லை என்றும், அந்த கதையில் சில மாற்றங்களை செய்து விரைவில் படமாக்க இருக்கிறேன் என்றும் பிரபல மலையாள வாரஇதழ் ஒன்றிற்கு கொடுத்த பேட்டியில் கூறியிருக்கிறார் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;