‘பெங்களூர் டேஸ்’ ரீ-மேக்கில் சமந்தா இல்லையாம்!

‘பெங்களூர் டேஸ்’  ரீ-மேக்கில் சமந்தா இல்லையாம்!

செய்திகள் 2-Feb-2015 9:18 AM IST VRC கருத்துக்கள்

அஞ்சலி மேனன் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியாகி வசூலை அள்ளிய படம் ‘பெங்களூர் டேஸ்’. இப்படத்தை தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே சமயத்தில் ரீ-மேக் செய்து தயாரிக்கிறது பிரபல பி.வி.பி. சினிமா நிறுவனம். தெலுங்கில் ‘பொம்மரிலு’ என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய பாஸ்கர் இப்படத்தை இயக்க, மலையாளத்தில் ஃபஹத் பாசில் – நஸ்ரியா நடித்த கேரக்டர்களில் சித்தார்த், சமந்தா நடிப்பதாக பேசப்பட்டது. ஆனால் லேட்டஸ்ட் தக்வலில் படி இப்படத்தில் சமந்தா நடிக்கவில்லையாம். இதற்கு காரணமாக சமந்தா கூறுவது, 3 தமிழ் படங்கள் மற்றும் 3 தெலுங்கு படங்களில் நடிக்க கமிட் ஆகியிருப்பதால் ‘பெங்களூர் டேஸ்’ படத்தில் நடிக்க தன்னிடம் போதுமான கால்ஷீட்ஸ் இல்லை என்று கூறியிருக்கிறார். ஆனால் சமந்தா இப்படத்திலிருந்து விலக உண்மையான காரணம் சித்தார்த்துடனான காதல் முறிவுதான் என்றும் கூறப்படுகிறது. இதில் எது உண்மை என்று தெரியவில்லை! சமந்தா தற்போது தமிழில் நடிக்கும் படம் ‘பத்து எண்றதுக்குள்ள’. விஜய் மில்டன் இயக்கும் இப்படத்தில் விக்ரம் ஜோடியாக நடிக்கிறார் சமந்தா!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - டீசர்


;