‘யு’ சான்றிதழ் பெற்ற முதல் பேய் படம்?

‘யு’ சான்றிதழ் பெற்ற முதல் பேய் படம்?

செய்திகள் 2-Feb-2015 8:46 AM IST VRC கருத்துக்கள்

வழக்கமாக பேய், பிசாசு, ஆவி சம்பந்தப்பட்ட த்ரில்லர் கதைகளை கொண்ட படங்களுக்கு சென்சாரில் ‘யு/ஏ’ அல்லது ‘ஏ’ சர்டிஃபிக்கெட் தான் வழங்குவார்கள். இதற்கு காரண்ம் பேய், பிசாசு சம்பந்தப்பட்ட கதைகள் என்றால் அதில் திகில், பயமுறுத்தல், குழந்தைகள் பார்க்க கூடாத காட்சிகள் என்று இருப்பதால் தான்! ஆனால் சமீபகாலமாக இப்படிப்பட்ட படங்கள் நகைச்சுவை காட்சிகளுடனும் வருவதால் அப்படங்களை எல்லா வயதினரும் கண்டு ரசிக்கின்றனர். இதற்கு சமீபத்தில் திரைக்கு வந்த ‘பிசாசு’, ‘டார்லிங்’ போன்ற படங்களை குறிப்பிடலாம்.

ஆனால், ‘எல்லா வயதினரும் பார்க்க கூடிய வகையில் அமைந்துள்ள படம் இது’ என்று கூறி ‘ஓம் சாந்தி ஓம்’ படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இப்படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்திருக்க, நீலம் உபாத்யாயா நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் 'நான் கடவுள்’ ராஜேந்திரன், ஜூனியர் பாலையா, ‘ஆடுகளம்’ நரேன், மலையாள நடிகர் பைஜு, வினோதினி முதலானோரும் நடித்துள்ள இப்படத்தை இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவின் சிஷ்யர் டி.சூர்யபிரபாகர் இயக்கியுள்ளார். ‘டார்லிங்’ படத்தில் ‘ கோஸ்ட் கோபால் வர்மா’ என்ற கேரக்டரில் நடித்து கலக்கிய ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் இப்படத்தில் வவ்வால் பாண்டி எனும் அசத்தலான ஒரு காமெடி கேரக்டரில் தூள் கிளப்பியிருக்கிறாராம். ‘ 8 பாயின்ட் என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனம் சார்பில் பி.அருமைச்சந்திரன் தயரித்துள்ள இப்படத்திற்கு விஜய் எபிநேசர் இசை அமைத்துள்ளார்.

‘ஒரு பேய் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியிருப்பது எங்களுக்கு தெரிந்து இது தான் முதல் முறை’ என்கின்றனர் இப்படக் குழுவினர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாயா - தூங்கா கண்கள் பாடல் ப்ரோமோ


;