‘என்னை அறிந்தால்’ : தமிழ்நாடு ரிலீஸ் குறித்த முழு விரவங்கள்

‘என்னை அறிந்தால்’ : தமிழ்நாடு ரிலீஸ் குறித்த முழு விரவங்கள்

செய்திகள் 31-Jan-2015 3:42 PM IST Chandru கருத்துக்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், அருண் விஜய், அனுஷ்கா, த்ரிஷா, விவேக் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் ‘என்னை அறிந்தால்’ படம் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸாகிறது. இதனை முன்னிட்டு கிட்டத்தட்ட படத்தின் முழு விநியோகமும் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. தமிழகத்தில் மட்டும் இப்படம் 420க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை வாங்கியவர்கள் மற்றும் எந்தெந்த ஏரியாவில் எத்தனை தியேட்டர்களில் படம் ரிலீஸ் செய்யப்படுகிறது என்ற முழு விவரத்தையும் கீழே தொகுத்துள்ளோம்.

சென்னை சிட்டி - எம்.கே.என்டர்பிரைசஸ் - 40+ தியேட்டர்கள்
செங்கல்பட்டு - மன்னன் ஃபிலிம்ஸ் - 115+ தியேட்டர்கள்
வட மற்றும் தென் ஆற்காடு - மன்னன் ஃபிலிம்ஸ் - 50+ தியேட்டர்கள்
சேலம் - ஜி ஃபிலிம்ஸ் - 55+ தியேட்டர்கள்
கோயம்புத்தூர் - எம்.கே.என்டர்பிரைசஸ் - 70+ தியேட்டர்கள்
திருச்சி, தஞ்சாவூர் - பரதன் ஃபிலிம்ஸ் - 40+ தியேட்டர்கள்
மதுரை - அழகர் ஃபிலிம்ஸ் - 40+ தியேட்டர்கள்
திருநெல்வேலி & ரூபன் ஃபிலிம்ஸ் - 15+ தியேட்டர்கள்

ஒவ்வொரு மல்டிப்ளக்ஸ்களிலும் வெளியாகும் தனித்தனி ஸ்கிரீன்களையும் சேர்த்தால் ‘என்னை அறிந்தால்’ பட தியேட்டர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 500ஐ தாண்டும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;