தனுஷ், சிவகார்த்திகேயனுக்கு நடுவே களமிறங்கும் உதயநிதி!

தனுஷ், சிவகார்த்திகேயனுக்கு நடுவே களமிறங்கும் உதயநிதி!

செய்திகள் 31-Jan-2015 1:50 PM IST Chandru கருத்துக்கள்

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் ‘அனேகன்’ படம் பிப்ரவரி 13ஆம் தேதியும், சிவகார்த்திகேயனின் ‘காக்கி சட்டை’ படம் 27ஆம் தேதியும் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் இந்த 2 படங்களுக்கு நடுவே உள்ள வெள்ளிக்கிழமையில் தன் படத்தை களமிறக்கவிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

அறிமுக இயக்குனர் ராம் பிரகாஷ் இயக்கத்தில் ‘அட்டகத்தி’ தினேஷ், நகுல், பிந்து மாதவி ஆகியோர் நடித்திருக்கும் படம் ‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’. இப்படத்த்திற்கு தமன் இசையமைக்க, ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ‘வில்லா’ புகழ் தீபக் குமார். சயின்ஸ் ஃபிக்ஸன் த்ரில்லர் படமான இதன் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இப்படத்தை பிப்ரவரி 20ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நிமிர் - டிரைலர்


;