கத்தி, லிங்கா, ஐ வழியில் எஸ்.ஜே.சூர்யாவின் இசை!

கத்தி, லிங்கா, ஐ வழியில் எஸ்.ஜே.சூர்யாவின் இசை!

செய்திகள் 31-Jan-2015 1:34 PM IST Chandru கருத்துக்கள்

சமீபகாலமாக பெரிய படங்களின் ரன்னிங் டைம் 3 மணி நேரத்தோடு வெளிவருவதும், பின்னர் முதல் காட்சிக்குப் பின்னர் ஒரு சில காட்சிகள் வெட்டப்பட்டு ரன்னிங் நேரம் குறைக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது. கடந்த வருடம் வெளிவந்த விஜய்யின் ‘கத்தி’ திரைப்படம் முதலில் 2 மணி நேரம் 50 நிமிடங்கள் ஓடியது. பின்னர் ஒரு சில தேவையில்லாத காட்சிகள் அதிலிருந்து தூக்கப்பட்டன. அதேபோல் சமீபத்தில் வெளிவந்து 50 நாட்களைக் கடந்திருக்கும் ரஜினியின் ‘லிங்கா’ படமும் ஆரம்பத்தில் 3 மணி நேரம் ஓடியது. பின்னர் ஒரு சில ஷோக்கள் முடிந்த பிறகு, கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் படத்திலிருந்து தூக்கப்பட்டன. ஷங்கரின் ‘ஐ’ படத்திற்கும் இதே நிலைமைதான்.

இப்போது இந்த வரிசையில் நேற்று வெளிவந்த எஸ்.ஜே.சூர்யாவின் ‘இசை’ படமும் இணைந்திருக்கிறது. சென்சாரில் யு/ஏ சான்றிதழ் வாங்கியிருக்கும் இப்படத்தின் முழுமையான ஓட்ட நேரம் 3 மணி நேரம் 8 நிமிடங்கள். படம் வெளியாகி பலரிடமும் பாராட்டுக்களைப் பெற்றுக் கொண்டிருந்தாலும், படத்தின் பலவீனமாக அனைவரும் சுட்டிக்காட்டியது இதன் ரன்னிங் டைமைத்தான். இதனால் தற்போது படத்திலிருந்து 7 நிமிடக் காட்சிகள் குறைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. எந்தெந்த காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன என்பது குறித்த தகவல்கள் விரைவில் தெரியவரும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;