குடும்பத்துடன் ‘டார்லிங்’கை ரசித்த இளையதளபதி விஜய்!

குடும்பத்துடன் ‘டார்லிங்’கை ரசித்த இளையதளபதி விஜய்!

செய்திகள் 31-Jan-2015 1:16 PM IST Chandru கருத்துக்கள்

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக அறிமுகமாகி வெளிவந்திருக்கும் ‘டார்லிங்’ படத்திற்கு பட்டிதொட்டியெங்கும் பலத்த வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது. பொங்கலை முன்னிட்டு ஜனவரி 15ஆம் தேதி வெளியான இப்படம் இரண்டு வாரங்களுக்குப் பிறகு இப்போதும் தமிழகத்தின் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தை நேற்று சென்னை 4 பிரேம்ஸ் பிரிவியூ தியேட்டரில் நடிகர் விஜய் பார்த்து மகிழ்ந்து ‘டார்லிங்’ படக்குழுவினரைப் பாராட்டிவிட்டுச் சென்றிருக்கிறார்.

சிம்புதேவன் இயக்கத்தில் ‘புலி’ படத்திற்காக கடந்த சில வாரங்களாக ஓய்வின்றி படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய்க்காக நேற்று ‘டார்லிங்’ சிறப்புக் காட்சி போட்டுக் காண்பிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை மிகவும் ஜாலியான மூடில் பார்த்து ரசித்த விஜய், தன் கவலைகளை மறந்து சிரித்து ரசித்தாராம். படம் முடிந்து வெளியே வந்ததும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, இயக்குனர் சாம் ஆன்டன் ஆகியோரிடம் கைகுலுக்கி மனதாரப் பாராட்டினாராம் விஜய்.

விஜய்யுடன் அவரது குடும்பத்தினரும் வந்திருந்து ‘டார்லிங்’ படத்தை ரசித்திருக்கிறார்கள். விஜய்யின் மனைவி சங்கீதா ஏற்கெனவே ‘டார்லிங்’ படத்தை பார்த்துவிட்டாராம். ஆனாலும், இன்னொருமுறை பார்ப்பதற்காக விஜய்யுடன் நேற்று வந்திருந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களுடன் விஜய்யின் மகன் சஞ்சய்யும் ‘டார்லிங்’கை ரசித்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;