ஹீரோவாகிறார் ‘மைனா’, ‘கும்கி’ படங்களின் ஒளிப்பதிவாளர்!

ஹீரோவாகிறார் ‘மைனா’, ‘கும்கி’ படங்களின் ஒளிப்பதிவாளர்!

செய்திகள் 31-Jan-2015 12:40 PM IST Chandru கருத்துக்கள்

மைனா, கும்கி, நிமிர்ந்து நில், மான் கராத்தே, காக்கி சட்டை உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய எம்.சுகுமார் விரைவில் ஹீரேவாக மாற இருக்கிறார். இந்தத் தகவல் இன்று (ஜனவரி 31) நடந்த ‘தொப்பி’ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் தெரிவிக்கப்பட்டது.

மதுரை சம்பவம், சிவப்பு எனக்குப் பிடிக்கும் படங்களின் இயக்குனர் யுரேகா தற்போது ‘தொப்பி’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு ஒளிப்பதிவை எம்.சுகுமார் கவனித்து வருகிறார். இப்படத்தின் ஹீரோவாக நடிக்க வைக்க முதலில் இவரிடம்தான் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது. ஆனால், ஒரு சில காரணங்களுக்காக அவர் ‘தொப்பி’யில் நடிக்க முடியாமல் போக, யுரேகா அடுத்ததாக இயக்கவிருக்கும் ‘மாடு’ என்ற படத்தில் ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார் ஹீரேவாக அறிமுகமாகவிருக்கிறார். இபடத்தில் பங்குபெறவிருக்கும் மற்ற நடிகர்கள், டெக்னீஷியன்கள் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் தெரியவரும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வாகா - டிரைலர்


;