அஜித் கேரியரில் முதலிடத்தைப் பிடிக்கும் ‘என்னை அறிந்தால்’

அஜித் கேரியரில் முதலிடத்தைப் பிடிக்கும் ‘என்னை அறிந்தால்’

செய்திகள் 31-Jan-2015 11:58 AM IST Chandru கருத்துக்கள்

பிப்ரவரி 5ஆம் தேதிதான் ‘தல’ ரசிகர்களுக்கு பொங்கல் திருவிழா. ஜனவரி 15ஆம் தேதி கொண்டாட வேண்டிய பொங்கலை கொஞ்சம் தள்ளி கொண்டாட சந்தோஷமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் ‘என்னை அறிந்தால்’ படம் அவரின் கேரியரில் மிக முக்கியமாக படமாக அமையும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அஜித் படம் என்றாலே தமிழகத்தில அதிகப்படியான திரையரங்குகளில் வெளியாவதும், மிகப்பெரிய ஓபனிங்கும் கிடைப்பதும் வாடிக்கையான ஒன்றுதான். ஆனால் இந்தமுறை தமிழகத்தைத் தாண்டியும் அஜித் படத்திற்கு பெரிய அளவில் தியேட்டர்கள் புக் செய்யப்பட்டு வருகிறதாம்.

தமிழகத்தில் 450க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் ‘என்னை அறிந்தால்’ படம் கேரளாவில் மட்டும் 170க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிடப்பட்டிருக்கிறதாம். எம்.ஜி.நாயர் கேரள விநியோக உரிமையை வாங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. அஜித் படத்தைப் பொறுத்தவரை கேரளாவில் இதுதான் அதிகபட்ச எண்ணிக்கை. அதேபோல் இப்படத்தின் அமெரிக்க வெளியீட்டு உரிமையை வாங்கியிருக்கும் அட்மாஸ் நிறுவனம் 95 திரையரங்குகளில் அங்கு வெளியிடத் திட்டமிட்டிருக்கிறதாம். இதுவும் அஜித் படங்களில் உச்சபட்ச எண்ணிக்கையாகும். அதேபோல் யுகேவில் 50க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படத்தை வெளியிடுகிறது ஐங்கரன் நிறுவனம். தவிர இதுவரை தமிழ்ப்படமே வெளியாகாத சில வெளிநாட்டு தியேட்டர்களில் ‘என்னை அறிந்தால்’ படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்களாம்.

மொத்தமாக பார்த்தால் உலகமெங்கும் 1200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ‘என்னை அறிந்தால்’ படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்திரஜித் - ட்ரைலர்


;