சமுத்திரக்கனி நடிக்கும் ‘பெட்டிக்கடைக்கு இன்று விடுமுறை’

சமுத்திரக்கனி நடிக்கும் ‘பெட்டிக்கடைக்கு இன்று விடுமுறை’

செய்திகள் 31-Jan-2015 10:55 AM IST Chandru கருத்துக்கள்

இயக்குனராக வித்தியாசமான படங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கும் சமுத்திரக்கனி இன்னொருபுறம் நடிகராகவும் தொடர்ந்து ஜொலித்து வருகிறார். ‘சுப்ரமணியபுர’த்தில் குரூர வில்லன், ‘ஈசனி’ல் போலீஸ் அதிகாரி, ‘சாட்டை’யில் வாத்தியார், ‘நீர்ப்பறவை’யில் இஸ்லாமிய தச்சர், ‘வேலையில்லா பட்டதாரி’யில் பாசமுள்ள அப்பா என நடிப்பில் பல பரிமாணங்களைக் காட்டி வரும் சமுத்திரக்கனி இப்போது ‘பெட்டிக்கடைக்கு இன்று விடுமுறை’ என வித்தியாசமான தலைப்பைக் கொண்ட படத்திலும் முக்கிய வேடமேற்றிருக்கிறார்.

அறிமுக இயக்குனர் கார்வண்ணன் இயக்கும் இப்படத்தின் ஹீரோவாக ‘மொசக்குட்டி’ வீராவும், ஹீரோயினாக புதுமுகம் ஒருவரும் நடிக்கிறார்கள். 40 வருடத்திற்கு முந்தைய காலகட்டத்தில் நடக்கிறதாம் இப்படத்தின் கதைகளம். அன்றைய காலகட்டத்தின் திருநெல்வேலியில் உள்ள குக்கிராமத்திலிருக்கும் ஒரு பெட்டிக்கடையை மையமாக வைத்து இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டு வருகிறதாம். பிப்ரவரி இறுதியில் இப்படத்திற்கான படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மதுரவீரன் - டிரைலர்


;