வக்கீலாக மாறும் ‘கோ’ அஜ்மல்!

வக்கீலாக மாறும் ‘கோ’ அஜ்மல்!

செய்திகள் 31-Jan-2015 10:49 AM IST Chandru கருத்துக்கள்

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளிவந்து சூப்பர்ஹிட்டான ‘கோ’ படத்தில் வித்தியாசமான வில்லன் வேடம் ஏற்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் அஜ்மல் அமீர். ஆனால், அதன் பிறகு அவர் ஹீரோவாக நடித்து வெளிவந்த கரும்பம்பட்டி, வெற்றிச்செல்வன் போன்ற படங்கள் சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை. அதோடு இவர் நடிப்பில் உருவாகி ரிலீஸுக்கு ரெடியாக இருக்கும் கதிர்வேல், உலா போன்ற படங்களும் எப்போது வெளிவரும் என்று தெரியவில்லை. இதனால் இப்போது தெலுங்கு பக்கம் ஒதுங்கிவிட்டார் அஜ்மல்.

ஈ.வி.கே.ராஜு இயக்கத்தில் உருவாகும் ‘க்ஷம்பானா’ எனும் தெலுங்கு படத்தில் அஜ்மலுக்கு வக்கீல் வேடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. க்ரைம் த்ரில்லர் படமான இதில் இரண்டு நாயகிகளை ஒப்பந்தம் செய்யவிருக்கிறார்களாம். விரைவில் அவர்களைப் பற்றிய விவரங்கள் அறிவிக்கப்படுமாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கூட்டாளி - டிரைலர்


;