கோலிவுட்டில் கேமியோ டிரென்ட்!

கோலிவுட்டில் கேமியோ டிரென்ட்!

செய்திகள் 30-Jan-2015 11:29 AM IST VRC கருத்துக்கள்

சமீபகாலமாக ஒரு ஹீரோ நடிக்கும் படத்தில் நட்புக்காக இன்னொரு ஹீரோ நடிப்பது வழக்கமாகி விட்டது. ஏற்கெனவே இது மாதிரியான பல படங்கள் வெளிவந்து வெற்றியும் பெற்றுள்ளன! அந்த வரிசையில் அடுத்ததாக ராஜேஷ் இயக்கும் ‘வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க’ படத்தில் ஆர்யாவுடன் விஷால் நடிக்கிறார். சிம்பு நடிக்கும், பாண்டிராஜ் இயக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தில் சிம்புவுடன் ஜெய் கேமியோ ரோலில் நடிக்கிறார். விஷ்ணு நடிக்கும் ‘இன்று நேற்று நாளை’ படத்தில் கெஸ்ட் ரோலில் ஆர்யா நடிக்கிறார். இது தவிர கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் நடிக்கும் ‘வஜ்ர கயா’ படத்தில் அவருடன் ஒரு பாடலுக்கு நம்ம ஊர் சிவகார்த்திகேயன் நடனம் ஆடி நடித்துள்ளார். இந்தப் படங்கள் தவிர, கௌதம் கார்த்திக் நடிக்கும், ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியுள்ள ‘வை ராஜா வை’ படத்தில் தனுஷ் ஒரு கேமியோ ரோலில் நடித்துள்ளார். இப்படி பெரும் நடிகர்கள் நடிக்கும் படங்களில் இன்னொரு ஹீரோ கெஸ்ட் ரோலில் நடிப்பது வரவேற்க வேண்டிய விஷயம் தான்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கீ - டீசர்


;