கமல் படம், மார்ச் 1-ல் ஆடியோ, ஏப்ரல் 2-ல் ரிலீஸ்

கமல் படம், மார்ச் 1-ல் ஆடியோ, ஏப்ரல் 2-ல் ரிலீஸ்

செய்திகள் 30-Jan-2015 10:54 AM IST VRC கருத்துக்கள்

கமல்ஹாசனின் ‘உத்தம வில்லன்’ படத்தின் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஜிப்ரான் இசை அமைத்துள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வருகிற மார்ச் மாதம் 1-ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இதனை தொடர்ந்து ‘உத்தம வில்லன்’ படத்தை ஏப்ரல் 2-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். லிங்கு சாமியின் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். இப்படத்தில் கமல்ஹாசனுடன் ஆன்ட்ரியா, பூஜாகுமார், பார்வதி மேனன், ஊர்வசி, இயக்குனர்கள் கே.பாலச்சந்தர், கே.விஸ்வநாத், ஜெயராம் முதலானோர் நடித்துள்ளனர். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் வெளியாகும் ஏப்ரல்-2 ஆம் தேதியன்று தான் உதயநிதி ஸ்டாலின் நடித்து தயாரித்துள்ள ‘நண்பேன்டா’ படமும் ரிலீசாகவிருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அதே கண்கள் - டீசர்


;