மீண்டும் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய்?

மீண்டும் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய்?

செய்திகள் 30-Jan-2015 10:36 AM IST Chandru கருத்துக்கள்

எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடித்திருக்கும் ‘இசை’ படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸாகிறது. இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பல அவதாரங்களை எடுத்த எஸ்.ஜே.சூர்யா இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் தன்னை அறிமுகப்படுத்தியிருக்கிறார். இரண்டு இசையமைப்பாளர்களுக்கிடையே நடக்கும் ‘ஈகோ’ மோதல்களை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இப்படத்தில் சத்யராஜுக்கு ஹீரோவுக்கு இணையான வேடம் கொடுக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் புரோமேஷனுக்காக எஸ்.ஜே.சூர்யா பேசும்போது, ‘‘என் இயக்கத்தில் விஜய் நடித்து கிட்டத்தட்ட 10 வருடங்களாகிவிட்டது. ஆனாலும், ‘இசை’ படத்தின் ஆடியோ விழாவிற்கு நான் அழைத்தபோது எந்தவித மறுப்பும் சொல்லாமல் சந்தோஷமாக வந்திருந்து ஆடியோவை வெளியிட்டார். இத்தனை உயரங்களுக்கு சென்றபிறகும் அவரின் இந்த எளிமை வியக்க வைக்கிறது. மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என நான் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்!’’ என்று விஜய் பற்றி கேட்ட கேள்விக்கு பதிலளித்தார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எச்சரிக்கை - டிரைலர்


;