ரூட்டை மாற்றிய ‘மூடர்கூடம்’ நவீன்!

ரூட்டை மாற்றிய ‘மூடர்கூடம்’ நவீன்!

செய்திகள் 30-Jan-2015 10:19 AM IST Chandru கருத்துக்கள்

2013ல் வெளிவந்து பலரது பாராட்டுக்களையும் அள்ளிக்குவித்த படம் ‘மூடர்கூடம்’. ‘ஒயிட் ஷேடோஸ் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்து இயக்கியவர் அறிமுக இயக்குனர் எஸ்.நவீன். சென்ட்ராயன், ராஜாஜி, குபேரன் என அதிகம் பிரபலமடையாத நடிகர்களை வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தை பாண்டிராஜ் வாங்கி வெளியிட்டு வெற்றி கண்டார். இப்படத்தைத் தொடர்ந்து நவீன் அடுத்த படத்தை எப்போது இயக்குவார் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்க, இயக்கத்தை ஓரம்கட்டி வைத்துவிட்டு சத்தமில்லாமல் புரொடக்ஷன் வேலைகளில் பிஸியாகிவிட்டார் இயக்குனர் நவீன்.

தன்னிடம் அசோஷியேட்டாக இருந்த தனராம் சரவணன் இயக்கும் முதல் படத்தை நவீன் தயாரிக்கிறார். ‘மூடர்கூடம்’ ராஜாஜி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் இயக்குனர் சமுத்திரக்கனிக்கும் முக்கிய வேடம் கொடுக்கப்பட்டுள்ளதாம். ‘மூடர்கூடம்’ படத்தைப்போல் பிளாக் காமெடிப் படமாக இல்லாமல், கிராமத்துப் பின்னணியில் அனைத்துத்தரப்பு ரசிகர்களையும் கவரும் வண்ணம் இப்படம் உருவாகி வருகிறதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஏமாளி - டீசர்


;