50வது நாளில் அடியெடுத்து வைக்கும் ராஜா லிங்கேஸ்வரன்!

50வது நாளில் அடியெடுத்து வைக்கும் ராஜா லிங்கேஸ்வரன்!

செய்திகள் 30-Jan-2015 8:58 AM IST Chandru கருத்துக்கள்

‘லிங்கா’ படத்தின் ரிலீஸ் அன்று ரஜினியின் பிறந்தநாளை தியேட்டரில் கொண்டாடினார்கள் சூப்பர்ஸ்டார் ரசிகர்கள். சூப்பர்ஸ்டாரின் இரண்டு வேடங்கள், கே.எஸ்.ரவிகுமார் இயக்கம், ரஹ்மான் இசை, அனுஷ்கா, சோனாக்ஷி என இரண்டு ஹீரோயின்கள், காமெடிக்கு சந்தானம், கருணாஸ் என ஏகப்பட்ட படை பரிவாரங்களுடன் களமிறங்கிய ‘லிங்கா’விற்கு மிகப்பெரிய ஓபனிங் கிடைத்தது. உலகமெங்கும் கிட்டத்தட்ட 3000 திரையரங்குகளில் வெளியிடப்பட்ட ‘லிங்கா’ முதல் 3 நாட்களிலேயே 100 கோடி வசூலை நெருங்கியதாகவும் கூறப்பட்டது.

வழக்கமான ரஜினி படங்களைவிட இரண்டு மடங்கு பெரிய விலைக்கு ‘லிங்கா’ விற்கப்பட்டதாலும், பண்டிகை நாட்களில் வெளியாகததாலும் இப்படத்தின் வசூல் படிப்படியாக குறைந்ததால், தமிழகத்தின் ஒரு சில விநியோகஸ்தர்கள் நஷ்டத்தை சந்திக்கும் நிலை வந்தது. ஆனாலும் ரஜினிக்கிருக்கும் தனிப்பட்ட வரவேற்பு இம்மியளவும் குறையததால்தான்... இதோ இன்று 50வது நாளைத் தொட்டிருக்கிறார் ராஜா லிங்கேஸ்வரன். ‘லிங்கா’வுக்குப் பிறகு பல பெரிய படங்கள் ரிலீஸானபோதும்கூட தமிழகத்தின் ஒரு சில திரையரங்குகளில் இன்னமும் ‘லிங்கா’வுக்கான காட்சி ஓடிக்கொண்டிருப்பது வியப்பதுதான் சூப்பர்ஸ்டார் மேஜிக்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;