பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ்!

பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ்!

செய்திகள் 29-Jan-2015 5:08 PM IST VRC கருத்துக்கள்

‘கயல்’ படத்தை தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கும் அடுத்த படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார். இதற்கான டிஸ்கஷன் இப்போது நடந்து வருகிறது. தற்போது பாலாஜி மோகன் இயக்கும் ‘மாரி’ படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இப்படத்திற்கு பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் ‘சூதாடி’ என்ற படத்திலும், வேல்ராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியிருக்கிறார் தனுஷ். ஆனால் இப்படங்களின் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்பது குறித்து எந்த அதிகாரபூர்வ தகவல்களும் இல்லை. அதனால் ‘மாரி’ படம் முடிந்ததும் தனுஷ் பிரபு சாலமன் இயக்கும் படத்தில் நடிப்பாரா இல்லை மற்ற இயக்குனர்களது படங்களில் நடிப்பார என்பது தெரியவரும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திட்டம் போட்டு திருடுற கூட்டம் - டிரைலர்


;