சிம்பு, நயன்தாராவுடன் இணையும் ஜெய்!

சிம்பு, நயன்தாராவுடன் இணையும் ஜெய்!

செய்திகள் 29-Jan-2015 3:29 PM IST VRC கருத்துக்கள்

‘வேட்டை மன்னன்’ படத்தில் சிம்புவுடன் ஜெய்யும் ஒரு கேரக்டரில் நடிக்கிறார். ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை. இந்நிலையில் இப்போது சிம்பு நடித்து வரும் ‘இது நம்ம ஆளு’ படத்திலும் ஜெய் ஒரு கேரக்டரில் நடிக்கிறார். பாண்டிராஜ் இயக்கும் இப்படத்தில் சிம்புவுடன் நயன்தாரா, ஆன்ட்ரியா முதலானோர் நடிக்க, ஜெய்யும் இப்படத்தில் இணைந்துள்ளார். ஜெய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு விரைவில் நடைபெறவிருக்கிறது. ஏற்கெனவே ‘ராஜா ராணி’ படத்தில் ஜெய், நயன்தாரா இணைந்து நடித்ததை தொடர்ந்து இப்போது சிம்பு, நயன்தாரா ஜோடியாக நடிக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தில் ஜெய்யும் இணைந்திருப்பது ரசிகர்களிடையே ஒரு எதிர்பர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வருகிற 5-ஆம் தேதி முதல் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படத்துடன் ‘இது நம்ம ஆளு’ படத்தின் டீஸரும் வரவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சக்க போடு போடு ராஜா - டிரைலர்


;