‘டூரிங் டாக்கீஸை’ பார்த்து கண்கலங்கிய விஜய் ஆண்டனி!

‘டூரிங் டாக்கீஸை’ பார்த்து கண்கலங்கிய விஜய் ஆண்டனி!

செய்திகள் 29-Jan-2015 11:58 AM IST VRC கருத்துக்கள்

எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கியுள்ள படம் ‘டூரிங் டாக்கீஸ்’. இரண்டு கதைகளை கொண்ட இப்படத்தில் ஒரு கதையின் நாயகனாக எஸ்.ஏ.சந்திரசேகரன் நடித்துள்ளார். இப்படம் நாளை ரிலீசாகிறது. இந்தப் படத்தை சென்ற டிசம்பர் 31-ஆம் தேதி இசை அமைப்பளர் விஜய் ஆண்டனிக்கு போட்டு காட்டியுள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகரன். படத்தை பார்த்து முடித்ததும் எதுவும் பேசாமல் சென்று விட்டுள்ளர் விஜய் ஆண்டனி! படத்தை பார்த்த விஜய் ஆண்டனியை படத்தில் வரும் ஒரு பெண் கேரக்டர் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதால் அன்று இரவு அவருக்கு தூக்கமே வரவில்லையாம்.

அத்துடன் தன் வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரி மீது இனம் புரியாத ஒரு மரியாதை ஏற்பட்டு அவரை புத்தாண்டு ‘கேக்’கை கட் பண்ண வைத்து மகிழ்ந்த விஜய் ஆண்டனி. அந்த இரவு முழுக்க மனைவி தோளில் சாந்தபடியே இருந்தாராம். மறுநாள் எஸ்.ஏ.சி.க்கு ஃபோன் செய்து உங்களை பாரக்க வேண்டும் என்று கூறிய விஜய் ஆண்டனி, எஸ்.ஏ.சி.யின் அலுவலகத்துக்கு வந்ததும் ‘உங்க படம் என்னை மிகவும் பாதித்து விட்டது’ என்று கூறி அழுதே விட்டாராம்! அந்த அளவுக்கு ‘டூரிங் டாக்கீஸ்’ விஜய் ஆண்டனி மனதில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றார் எஸ்.ஏ.சி. ‘டாப் 10 சினிமா’வுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எமன் - டிரைலர்


;