தமிழ்நாட்டு கலாச்சாரத்தை வலியுறுத்தும் படம்!

தமிழ்நாட்டு கலாச்சாரத்தை வலியுறுத்தும் படம்!

செய்திகள் 29-Jan-2015 11:08 AM IST VRC கருத்துக்கள்

‘ஸ்கை மூவீஸ்’ என்ற பட நிறுவனம் சார்பில் அறந்தாங்கியை சேர்ந்த எஸ்.பகதூர்ஷா தயாரிக்கும் படம் ‘மேல்நாட்டு மருமகன்’. இந்தப் படத்தில் ராஜ்கமல் ஹீரோவாக அறிமுகமாகிறார். கதாநயகியாக ஆண்ட்ரீயன் அறிமுகமாகிறார். இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் எம்.எஸ்.எஸ். படம் குறித்து கூறும்போது,
‘‘ஒவ்வொருவரும் பணம் சம்பாதிக்க பல நாடுகள் பறந்தாலும் பண்பாட்டுக்கும், கலாச்சாரத்துக்கும் நம்ம நாட்டை மிஞ்ச எந்த நாடும் இல்லை என்பதே இப்படத்தின் கரு.

கலாச்சாரம் கலந்த படம் என்பதால் இப்படத்தின் படப்பிடிப்புகளை தமிழ்நாட்டில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் படமாக்கி இருக்கிறோம். நம் கலாச்சாரத்தை மதிப்பவர்களுக்கு இப்படம் மிகவும் பிடிக்கும். அடுத்த மாதம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவிருக்கிறது. இப்படத்திற்கு வி.கிஷோர் குமார் இசை அமைத்துள்ளார். கௌதம் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆடியோ வெளியீட்டு விழாவுடன் படமும் அதி விரைவில் ரிலீசாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;