கருணாஸ் நடிக்கும் லொடுக்கு பாண்டி!

கருணாஸ் நடிக்கும் லொடுக்கு பாண்டி!

செய்திகள் 29-Jan-2015 11:01 AM IST VRC கருத்துக்கள்

‘வி விக்டரி கிரியேஷன்ஸ் மற்றும் ‘ஜி பிக்சர்ஸ்’ பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘லொடுக்கு பாண்டி’. கருணாஸ் அறிமுகமான ‘நந்தா’ படத்தில் அவரது கேரக்டரான லொடுக்கு பாண்டி என்ற காதாபாத்திரப் பெயரையே இப்படத்திற்கு சூட்டி ஒரு காமெடி படமாக உருவாக்கி உள்ளார் இதனை இழுதி இயக்கியுள்ள ரஜனீஷ்.

இதில் கருணாஸே கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நேகா சக்சேனா நடிக்கிறார். இவர்களுடன் இளவரசு, மனோபாலா, சென்ட்ராயன், ரிஷா, ரேகா ஆகியோரும் நடிக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குனர் ரஜனீஷிடம் கேட்டோம். ‘‘அடுத்தவர்களை ஏமாற்றுவது, இன்னொருவரது வாழ்கையை தட்டி பறிப்பது, திருட்டு வாழ்க்கை என்று வாழ்வதை விட்டு நேர்மையாக வாழ்ந்தால் வெற்றியின் உச்சத்தை தொடலாம். நேர்மையில்லாமல் கிடைக்கும் வெற்றி தற்காலிகமானதே! அது நிரந்தரமல்ல என்கிற கருத்தை படு சுவாரஸ்மாக, காமெடியாக உருவாக்கி உள்ளோம். இப்படத்திற்காக 15 லட்சம் ரூபாய் செலவில் அரங்கு ஒன்று அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. விரைவில் திரைக்கு வருகிறது ‘லொடுக்கு பாண்டி’ என்றார் இயக்குனர் ரஜனீஷ். இப்படத்திற்கு எம்.எஸ்.தியாகராஜன் இசை அமைக்க, ஜெய் ஆனந்த் ஒளிப்ப்பதிவு செய்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இரவுக்கு ஆயிரம் கண்கள் - டிரைலர்


;