அடுத்தடுத்து வெளியாகும் அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன் படங்கள்!

அடுத்தடுத்து வெளியாகும் அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன் படங்கள்!

செய்திகள் 29-Jan-2015 10:36 AM IST Chandru கருத்துக்கள்

வரும் பிப்ரவரி மாதம் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டமான மாதம்தான். 3 பெரிய படங்கள் இந்த மாதத்தில் வெளிவரவிருக்கின்றன. கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய், விவேக் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் ‘என்னை அறிந்தால்’ படம் பிப்ரவரி 5ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. கடைசியாக வெளிவந்த ‘வீரம்’ படத்திற்குப் பிறகு 1 வருட இடைவெளியில் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படம் வெளியாவதால் தல ரசிகர்கள் கொண்டாட்டத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதேபோல் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் ‘அனேகன்’ படம் காதலர்தினத்திற்கு முந்தைய நாளான பிப்ரவரி 13ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸாகிறது. முதல்முறையாக தனுஷ் படத்திற்காக தமிழ்நாட்டில் மட்டும் 400க்கும் அதிகமான திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதோடு ஹிந்தி பதிப்பையும் சேர்த்து உலகம் முழுவதும் 1000 தியேட்டர்களுக்கும் அதிகமாக ‘அனேகன்’ படம் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

தனுஷின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ‘காக்கி சட்டை’ படம் பொங்கலுக்கே ரிலீஸாக வேண்டியது. வரிசையாக பெரிய படங்கள் வந்து கொண்டிருந்ததால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிக் கொண்டே போனது. இப்போது வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இப்படம் வெளியாகவிருப்பதை உறுதி செய்திருக்கிறார்கள். எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் ‘காக்கி சட்டை’யை வாங்கி வெளியிடுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;