‘கத்தி’ கதிரேசன் அடித்த செஞ்சுரி!

‘கத்தி’ கதிரேசன் அடித்த செஞ்சுரி!

செய்திகள் 29-Jan-2015 10:06 AM IST Chandru கருத்துக்கள்

கடந்த வருடம் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையைச் செய்த படம் ‘இளையதளபதி’யின் கத்தி. ‘துப்பாக்கி’ படத்திற்குப் பிறகு மீண்டும் விஜய்யை வைத்து இப்படத்தை இயக்கினார் ஏ.ஆர்.முருகதாஸ். பல சர்ச்சைகளையும், தடைகளையும் தாண்டிதான் இப்படம் திரையரங்கில் ரிலீஸானது. ஆனால், எதிர்பார்த்ததைவிடவும் இப்படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைக்க பட்ட கஷ்டங்கள் அனைத்ததையும் மறந்து சந்தோஷமாக வெற்றியைக் கொண்டாடியது ‘கத்தி’ டீம்.

வழக்கமான ஆக்ஷன் படமாகவே ‘கத்தி’ இருந்தாலும், அதிலும் விவசாயிகள் பற்றிய ஒரு சமூக கருத்தை ஏ.ஆர்.முருகதாஸ் கொடுத்திருந்தது விமர்சனரீதியாக பலராலும் பாராட்டப்பட்டது. இப்படத்தில் ஜீவானந்தம், கதிரேசன் என இரட்டை வேடங்களை ஏற்றிருந்தார் விஜய். இதில் ‘கத்தி’ கதிரேசன் விஜய் ரசிகர்களைக் கவர்ந்தார் என்றால், மற்ற ரசிகர்களிடம் ஜீவானந்தம் கேரக்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. படம் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக படக்குழுவினரே சந்தோஷமாக அறிவிக்கும் அளவுக்கு பெரிய வெற்றியைப் பெற்றது கத்தி. தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 22ஆம் தேதி வெளியான ‘கத்தி’ இப்போது செஞ்சுரி அடித்திருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இறவாகாலம் - டீசர்


;